காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் தீயணைப்பு நிலையம், 1942ல் துவங்கப்பட்டது. அலுவலகத்திற்கு மட்டும், 30 ஆண்டுகளுக்கு முன் புதிய கட்டடம் கட்டப்பட்டது.
இந்த இடத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது, 6 கோடி ரூபாய் நிதி அரசு ஒதுக்கியுள்ளது.
இந்த இடத்தில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தும் இடம் மற்றும் அலுவலகம், மாவட்ட அலுவலர் அறை, தீயணைப்பு மீட்பு உபகரணங்கள் பாதுகாப்பு அறை, வீரர்களுக்கு தேவையான ஓய்வு அறை, கழிப்பறை போன்ற வசதிகளுடன்கூடிய புதிய கட்டடம் கட்டப்பட இருக்கிறது.
தற்போது உள்ள அலுவலகத்தை காலி செய்து, வேறு இடத்திற்கு சென்றால்தான் புதிய கட்டடம் கட்டும் பணி துவங்க முடியும். அதற்கான இடம் நகர் பகுதியில் தேடி வருகின்றனர். தற்போது, காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் தீயணைப்பு நிலையம் இயங்கி வருகிறது.
இதுகுறித்து தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வேறு இடம் பார்த்து கொண்டிருக்கிறோம். இடம் தேர்வு செய்யப்பட்ட பின், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகம் சார்பில் புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கும்' என்றார்.