மாணவியை காதலிக்க வற்புறுத்தியவர் மீது புகார்

55பார்த்தது
மாணவியை காதலிக்க வற்புறுத்தியவர் மீது புகார்
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் காவல் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர், 18 வயது இளம்பெண். இவர், தனியார் கல்லுாரியில் படித்து வருகிறார்.
அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், மேற்கண்ட கல்லுாரி மாணவியிடம், தொடர்ச்சியாக, தன்னை காதலிக்க வேண்டும் என, கட்டாயப்படுத்தி வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு 9: 00 மணிக்கு, மாணவி கடைக்கு சென்று வீடு திரும்பும்போது, வழிமறித்த அந்த வாலிபர், தன்னை திருமணம் செய்யக் கூறி வற்புறுத்தியுள்ளார்.

அதற்கு மாணவி மறுத்துள்ளார். இதனால், கோபமடைந்த வாலிபர், மாணவியை கையால் அடித்துள்ளார். அப்போது, மாணவியுடன் வந்த அவரின் தம்பி, வாலிபரை தட்டிக்கேட்டுள்ளார். அவரையும் வாலிபர் அடித்துள்ளார்.
இது தொடர்பாக, மாணவி கேளம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த வாலிபர் குறித்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி