கனமழையால் வானில் வட்டம் அடித்த விமானங்கள்

62பார்த்தது
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னல் சூறைக்காற்றுடன் மழை பெய்து மோசமான வானிலை நிலவுவதால், சென்னை விமான நிலையத்தில் இரண்டாவது நாளாக விமான சேவைகள் பாதிப்பு.

அபுதாபி திருச்சி டெல்லி திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இருந்து வந்த நான்கு விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துக் கொண்டு இருக்கின்றன. அதைப்போல் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களான கொல்கத்தா, புனே, ஹைதராபாத், மும்பை, கோவா, ராஜமுந்திரி உள்ளிட்ட ஆறு புறப்பாடு விமானங்கள் தாமதம்.

சென்னை விமான நிலையத்தில் மோசமான வானிலை காரணமாக, வருகை புறப்பாடு விமானங்கள் 10 விமான சேவைகள் தாமதம்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டாவது நாளாக இன்றைய தினம் பிற்பகலிலும் திடீரென இடி மின்னல் சூறைக் காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. சென்னை விமான நிலைய பகுதிகளிலும் இடி மின்னல் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் இரண்டாவது நாளாக இன்றும் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி