காஞ்சிபுரத்தில் உள்ள பெரும்பாலான வங்களின் ஏ. டி. எம். , களில், 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் கிடைப்பதில்லை. அரிதாகவே, சில ஏ. டி. எம். , இயந்திரத்தில் 100 ரூபாய் கிடைக்கிறது.
ஆனால், பெரும்பாலான நேரங்களில், எந்தவொரு ஏ. டி. எம். , இயந்திரங்களிலும், 100 மற்றும் 200 ரூபாயை பெற முடியவில்லை என, வங்கி வாடிக்கயைாளர்கள் புலம்புகின்றனர். அதற்கு மாறாக, 500 மட்டுமே இருப்பதாக ஏ. டி. எம். , இயந்திரங்கள் தெரிவிக்கின்றன.
வாடிக்கையாளருக்கு தேவையான ரூபாயை ஏ. டி. எம். , வாயிலாக பெற முடிவதில்லை. வாடிக்கையாளர்களால், 500 ரூபாய்க்கும் குறைவாக பெற முடியாததால், சில சமயம் சிரமப்படுகின்றனர்.
எனவே, வங்கி நிர்வாகம், ஏ. டி. எம். , இயந்திரத்தில், 100 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.