86 லட்சம் கிலோ உரம் கையிருப்பு

51பார்த்தது
86 லட்சம் கிலோ உரம் கையிருப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கூட்டுறவு மற்றும் தனியார் கடைகளில், விவசாயத்திற்கு தேவையான யூரியா, பொட்டாஷ் போன்ற உரங்கள் போதுமான அளவில் கையிருப்பு வைப்பதில்லை என, விவசாயிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

அதேசமயம், மாவட்டம் முழுதும், உரங்கள் கையிருப்பு உள்ளதாக வேளாண் துறை தகவல் தெரிவித்துள்ளது.

கூட்டுறவு மற்றும் தனியார் கடைகளில், 44 லட்சத்து 26, 000 கிலோ யூரியா, 5 லட்சத்து 7, 000 கிலோ டி. ஏ. பி. , 4 லட்சம் 11, 000 கிலோ பொட்டாஷ், 31 லட்சத்து 89, 000 கிலோ காப்ளக்ஸ், 1 லட்சத்து 13, 000 கிலோ சூப்பர் பாஸ்டேட், என, மொத்தம் 86 லட்சத்து 46, 000 கிலோ உரம் கையிருப்பில் உள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி