பு. மாம்பாக்கத்தில் புதிய பஸ்நிலையம் அமைவதற்கு எதிர்ப்பு

50பார்த்தது
பு. மாம்பாக்கத்தில் புதிய பஸ்நிலையம் அமைவதற்கு எதிர்ப்பு
பு. மாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலைய அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில பாரத இந்து மகா சபா சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. உளுந்தூர்பேட்டை புதிய பஸ் நிலையம் பு. மாம்பாக்கம் பகுதியில் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பஸ் நிலையம் இருக்கின்ற இடத்திலேயே பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் அகில பாரத இந்து மகா சபா சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு அகில பாரத இந்து மகா சபா மாநில பொதுச் செயலாளர் செந்தில் தலைமை தாங்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பெரியசாமி,


மாவட்ட பொதுச் செயலாளர் பாரதி, மாவட்டத் தலைவர் சபரி ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி