கோவில் கலசம் திருட்டு போலீசார் விசாரணை

70பார்த்தது
கோவில் கலசம் திருட்டு போலீசார் விசாரணை
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள, நகர் கிராமத்தில் ஏரிக்கரை அருகே அமைந்துள்ள அய்யனார் கோயிலில் நேற்று முன்தினம் பூஜைகளை முடித்துவிட்டு பூசாரி கதவை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை பார்த்த போது கோயில் மேல்பகுதியில் உள்ள கோபுரக் கலசத்தை யாரோ மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி