கள்ளக்குறிச்சி: வாலிபருக்கு 'போக்சோ'

84பார்த்தது
கள்ளக்குறிச்சி அடுத்த புக்கிரவாரி பகுதியைச் சேர்ந்தவர் சின்னையன் மகன் விக்னேஷ், 22; இவர், 15 வயது சிறுமியை, காதலிப்பதாக ஆசை வார்தை கூறி பழகினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. குடும்பத்தினர் சிகிச்சைக்காக சிறுமியை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார், விக்னேஷ் மீது 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி