வாணாபுரம் அடுத்த சூர்யாபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ், 54; நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, இவரது மனைவி ஜெயசீலி பார்த்தபோது, செல்வராஜ் வீட்டில் இல்லை. அதிர்ச்சியடைந்தவர், பல்வேறு இடங்களில் அவரைத் தேடினார்.
இந்நிலையில் பழைய சிறுவங்கூர் எல்லையில், மணிமுக்தா அணைக் கரையில் செல்வராஜ் அணிந்திருந்த லுங்கி கிடந்தது. கிராமம் மக்கள் அணையில் இறங்கித் தேடியதில் செல்வராஜ் நீரில் மூழ்கி இறந்துகிடந்தது தெரியவந்தது. இரு சம்பவங்கள் குறித்தும் பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.