சங்கராபுரம் அருகே லாரி ஓட்டுநர் உயிரிழப்பு

2628பார்த்தது
சங்கராபுரம் அருகே லாரி ஓட்டுநர் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்துள்ள, பொய்யகுணம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ் 46, லாரி ஓட்டுநர். இவர் வெளிமாநிலத்தில் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி பொய்யகுணம் கிராமத்தில் உள்ள முனியப்பன் கோவில் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே அவர் உயிரிழந்தார்.

இது குறித்து சங்கராபுரம் போலீசார் நேற்று வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி