தண்ணீரின்றி கருகும் கரும்பு பயிர்: விவசாயிகள் வேதனை

83பார்த்தது
தண்ணீரின்றி கருகும் கரும்பு பயிர்: விவசாயிகள் வேதனை
சிறுவங்கூரில் தண்ணீரின்றி கரும்பு பயிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி பகுதிகளில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மற்றும் தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. இதனால், ஆண்டுதோறும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்படுகிறது.

கள்ளக்குறிச்சி அடுத்த எடுத்தவாய்நத்தம், தோப்பூர், சடையம்பட்டு, க. அலம்பளம், குதிரைச்சந்தல், சிறுவங்கூர், ரங்கநாதபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கிணற்று பாசனத்தை நம்பி கரும்பு பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். கோடையின் உச்சத்தால் பல இடங்களில் போதிய தண்ணீர் இன்றி விவசாய தொழில் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிறுவங்கூர் கிராம பகுதி யில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு தோட்டத்திற்கு முழு வதுமாக தண்ணீர் பாய்ச்ச முடியாததால் கரும்பு பயிர்கள் கருகி வருகின்றன. இதேபோல் தண்ணீர் இல்லாமல் பல்வேறு கிராமங்களில், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், கரும்பு உள்ளிட்ட பயிர்களை பாதுகாக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி