கள்ளக்குறிச்சி சி. இ. ஓ. , பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மதுரை மாவட்ட சி. ஐ. ஓ. , நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக (சி. இ. ஓ. , ) பணிபுரிந்த முருகன், சென்னை பள்ளி கல்வி இயக்கம், துணை இயக்குனர் (மின் ஆளுமை) அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து மதுரை மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த கார்த்திகா, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு, நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டையில் மாவட்ட கல்வி அலுவலராக பணிபுரிந்து, முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்று, மதுரை மாவட்டத்திற்கு பணியிட மாற்றத்தில் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.