தனியார் கல்லூரியில் டெங்கு விழிப்புணா்வு கருத்தரங்கு

75பார்த்தது
தனியார் கல்லூரியில் டெங்கு விழிப்புணா்வு கருத்தரங்கு
இந்திலி டாக்டா் ஆா். கே. எஸ் கல்வி நிறுவனங்கள் சாா்பில் டெங்கு விழிப்புணா்வு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. கருத்தரங்குக்கு, கல்லூரியின் நிா்வாக அலுவலரும், முதல்வருமான கு. மோகனசுந்தா் தலைமை வகித்தாா். துணை முதல்வா் பெ. ஜான்விக்டா் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக கடலூா் மண்டல பூச்சியில் வல்லுநா் மீனா பங்கேற்று டெங்கு காய்ச்சல் பரவும் விதம், அதனை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து பேசினாா். நிகழ்வில், மேலூா் வட்டார சுகாதார ஆய்வாளா் ரவி, கடலூா் இளநிலை பூச்சியியல் வல்லுநா் சிட்டிபாபு, கள்ளக்குறிச்சி இளநிலை பூச்சியியல் வல்லுநா் சரவணன், மேலூா் சுகாதார ஆய்வாளா் கெளதம், கல்லூரியின் மாணவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, சுகாதாரக ஆய்வாளா் பயிற்சியாளா் உதவிப் பேராசிரியை மேகலை வரவேற்றாா். முடிவில், சுகாதார ஆய்வாளா் பயிற்சியாளா் உதவிப் பேராசிரியா் லோகு நன்றி கூறினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பவுலின் சங்கீதா, ராணி, சண்முக சுந்தரி செய்திருந்தனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி