கல்வராயன்மலையில் உள்ள கரியாலார் ஆர். சி. பள்ளி வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு வட்டத்தலைவர் கந்தசுவாமி தலைமை தாங்கினார். வட்டச் செயலர் டேவிட் சாமுவேல்ராஜ் வரவேற்றார். மாவட்டத் தலைவர் அய்யா மோகன் துவக்கவுரையாற்றினார்.
இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அங்கன்வாடிப் பணியாளர், சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7, 850 வழங்க வேண்டும், 70 வயதைக் கடந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட செயலர் கேசவராமானுசம், மாவட்ட பொருளாளர் பாஸ்கரன், வட்டத் தலைவர் அன்பழகன், செயலர் சடகோபன், பொருளாளர் கோவிந்தராசன், சுப்ரமணியன், தங்கவேல், மகளிரணி செல்வராணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வட்டப் பொருளாளர் ஜோதியம்மாள் நன்றி கூறினார்.