வாணாபுரம் அடுத்த மேல்சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் ரகோத்தமன், 33; இவரது மகேந்திரா டிராக்டர் மற்றும் டிப்பரை தொழுவந்தாங்கலை சேர்ந்த விஜயகுமார் ஓட்டி வருகிறார். கடந்த 1ம் தேதி இரவு தொழுவந்தாங்கலில் நிறுத்தப்பட்ட டிராக்டர், டிப்பர் காணாமல் போனது. இது குறித்த புகாரின் பேரில் பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், சந்தேகத்தின் பேரில் பகண்டைகூட்ரோட்டை சேர்ந்த பொன்முடி மகன் பில்டாக் என்கிற பழனிவேல், 51; என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் டிராக்டர், டிப்பர் திருடியதை ஒப்புக்கொண்டார்.
பிடாக் என்கிற பழனிவேல் பழைய டிராக்டர் உள்ளிட்ட விவசாய கருவிகளை வாங்கி விற்பனை செய்பவர். கடந்த சில தினங்களுக்கு முன் ரகோத்தமனின் டிராக்டரை வேறொரு நபரிடம் விற்க பழனிவேல் முயற்சித்துள்ளார். ஆனால், கமிஷன் தொகை ஒத்து வராததால் ரகோத்தமன் டிராக்டர் விற்கவில்லை.
இதனால் கோபமடைந்த பழனிவேல் கடந்த 1ம் தேதி இரவு டிராக்டர், டிப்பரை திருடிச் சென்றுள்ளார். தொடர்ந்து, டிப்பரில் வேறு பெயிண்ட் அடித்தும், டிராக்டரில் சில மாறுதல்களையும் செய்து பள்ளிப்பட்டு காட்டுகொட்டாய் பகுதியில் நிறுத்தியதும் போலீசார் விசாரணையில் தெரிந்தது. உடன் பகண்டைகூட்ரோடு போலீசார் டிராக்டர், டிப்பரை பறிமுதல் செய்து பில்டாக் என்கிற பழனிவேலை கைது செய்தனர்.