திருக்கோவிலுார் அடுத்த தகடி கிராமத்தில் உள்ள அழகிய நாதீஸ்வரர் கோவில் இடம் அளவீடு செய்யப்பட்டது.
தகடி கிராமத்தில், பழமை வாய்ந்த அழகிய நாதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான இடங்களை இந்து சமய அறநிலையத்துறை நில அளவையர்கள் மூலம் அளவீடு செய்யப்பட்டது.
கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில், அறநிலையத்துறை எழுத்தர் நரேஷ் குமார் மேற்பார்வையில், ஆலய நிலங்கள் தனி தாசில்தார் மனோஜ் முனியன் அளவீடு செய்தார்.
ஒன்றிய கவுன்சிலர் கணேசன், ஊராட்சி தலைவர் கனகராஜ் உடனிருந்தனர்.