கள்ளக்குறிச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட பொருாளர் ரஞ்சித்குமார் தலைமை தாங்கினார். வி. ஏ. ஓ. , முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் ஜெகன், மாவட்ட பிரசார செயலாளர் மாதேஸ்வரன், வி. ஏ. ஓ. , சங்க மாவட்ட தலைவர் கருணா நிதி, துணைத் தலைவர் ராஜா, இணை செயலாளர் நாகராஜ், தலைமை நிலைய செயலாளர் வினோத், ஒருங்கிணைப்பாளர் விஜயபாரதி முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் வரதராஜன் கண்டன உரையாற்றினார். வி. ஏ. ஓ. , க்களுக்கு டிஜிட்டல் கிராப் சர்வே தொழில்நுட்ப உபகரண கருவி வழங்கிடவும், செயலியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், நிர்வாகிகள் மணிகண்டன், கலையரசன், செந்தில்நாதன், சரவணன், உஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.