ஒரே நாளில் 3 பைக்குகள் அடுத்தடுத்து திருட்டு

65பார்த்தது
திருக்கோவிலுாரில் நேற்று ஒரே நாளில் 3 பைக்குகள் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருக்கோவிலுார் நகர் முழுவதும் சமீபத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் கட்டுப்பாட்டு அறை காவல் நிலையத்தில் உள்ளது. இதனால், நகரில் போலீசார் ரோந்து பணி என்பதை காண்பதே அரிதான நிகழ்வாக இருந்து வருகிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல், திருட்டு சம்பவங்கள் சமீப நாட்களாக அதிகரித்துள்ளது.

நேற்று காலை பல்வேறு இடங்களில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் அடுத்தடுத்து 3 பைக்குகள் திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்ன கடைவீதி அருகே சுந்தரமூர்த்தி, 50; என்பவரது பைக், துலாம்பூண்டியைச் சேர்ந்த சுதாகர், 40; கீழையூர், சிவன் கோவில் அருகிலும், மேலும் ஒருவரது பைக் கிழக்கு வீதி காமாட்சி திருமண மண்டபம் அருகேயும் திருடு போனது.

புகார் அளிக்க வந்தவர்களிடம் போலீசார் வாகனத்தை பாதுகாப்பாக நிறுத்த வேண்டியது உங்கள் பொறுப்புதான் என கடிந்து அனுப்பியது பைக்கை இழந்தவர்களுக்கு மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


நகரின் முக்கிய இடங்களான நான்கு முனை சந்திப்பு, ஐந்துமுனை சந்திப்பு, ஏரிக்கரை மூலை உள்ளிட்ட பகுதிகளில் நிரந்தரமாக பாதுகாப்பு பணியில் போலீசாரை அமர்த்த வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் இது போன்ற திருட்டு சம்பவங்கள் இனியும் நிகழாமல் தடுக்க முடியும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி