மோடி 3.O: இன்று (ஜூன் 9) தொடங்குகிறது புதிய அத்தியாயம்.!

78பார்த்தது
மோடி 3.O: இன்று (ஜூன் 9) தொடங்குகிறது புதிய அத்தியாயம்.!
நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக இன்று (ஜூன் 9) பதவியேற்கிறார். இரவு 7.15 மணிக்கு ராஷ்டிரபதி பவனில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது . இதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன. பதவியேற்பு விழாவையொட்டி டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 8,000 விருந்தினர்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ், இலங்கை, பூடான், நேபாளம், மொரிஷியஸ், சீஷெல்ஸ் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளின் தலைவர்கள், பிரதமர்கள் விருந்தினர்களாக பங்கேற்கவுள்ளனர்.

தொடர்புடைய செய்தி