பரிதவித்த குட்டியானை.. முகாமிற்கு அழைத்துச் சென்ற வனத்துறை!

65பார்த்தது
கோவை மருதமலை வனப்பகுதியில் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பெண் யானையின் 4 மாத குட்டி யானை, தாயை பிரிந்து பாசப்போராட்டம் நடத்திவந்தது. கடந்த பத்து நாட்களாக குட்டி யானையை வனத்துறையினர் தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். உடல்நிலை சீராக இல்லாததால் தாய் யானை குட்டியை சேர்த்துக் கொள்ளாமல் இருந்தது. தொடர்ந்து வேறு யானை கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியும் தோல்வியடைந்தது.

இந்த நிலையில், குட்டி யானையை முதுமலை யானைகள் முகாமுக்கு அனுப்பி வைக்க வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இன்று (ஜுன் 9) அதிகாலை 3.40 மணியளவில் குட்டியானைக்கு பால் மற்றும் உணவு வழங்கப்பட்டு கால்நடை மருத்துவர் குழுவினர் பரிசோதனை செய்தனர். பின்னர் வாகனம் மூலம் நீலகிரியில் உள்ள முதுமலை யானைகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு குட்டி யானை பராமரிக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி