சிறுமியை காதலனுக்கு விருந்தாக்கிய கொடூரம்.. காதலர்கள் கைது!

15277பார்த்தது
சிறுமியை காதலனுக்கு விருந்தாக்கிய கொடூரம்.. காதலர்கள் கைது!
சென்னையில் 15 வயது பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அளித்த புகாரில் பெண் சினிமா காஸ்ட்யூம் டிசைனர் அவரது காதலனுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சாலிகிராமத்தைச் சேர்ந்த 15 வயது மாணவி தனது நண்பர்களுடன் அண்ணாநகரில் உள்ள ஒரு கஃபேவிற்கு அடிக்கடி சென்ற போது அங்கு, பிரதிக்ஷா அகிரா என்பவர் பழக்கமாகியுள்ளார். இந்த நிலையில், பிரதிக்ஷாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வருமாறு பள்ளி மாணவிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சம்பவத்தன்று பிரதிக்ஷாவின் பேச்சை நம்பி அங்கு சென்ற போது, அவருக்கு மயக்க மருந்து கலந்த கேக்கை கொடுத்து அவரது காதலன் சோமேஷ் மற்றும் நண்பர் வில்லியம்ஸ் ஆகியோர் பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பிரதிக்ஷா மற்றும் சோமேஷ் ஆகிய இருவரையும் நேற்று (ஜுன் 8) போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி