உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் மனைவி ப்ளோரிசியா மேரி என்பவர் தனது விவசாய நிலத்தில் உள்ள சுமார் 60 அடி ஆழ கிணற்றில் நேற்று தவறி விழுந்துள்ளார். பின்னர் ப்ளோரியா மேரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ரிஷிவந்தியம் தீயணைப்பு நிலையத்தில் தகவல் தெரிவதனர். தகவலின் பெயரில் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று உயிருடன் ப்ளோரியா மேரியை மீட்டனர் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.