இன்று (செப். 13)கூட்டுறவு சங்க பணியாளர் நாள்

84பார்த்தது
இன்று (செப். 13)கூட்டுறவு சங்க பணியாளர் நாள்
கள்ளக்குறிச்சி மண்டலத்தில் கூட்டுறவு சங்க பணியாளர் நிகழ்வு இன்று நடைபெற உள்ளதாக கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி நேப்பால் தெருவில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கூட்டுறவு சங்க பணியாளர் நிகழ்வு இன்று (13ம் தேதி) காலை 10. 30 மணிக்கு நடக்கிறது.

கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் மற்றும் விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் தலைமை தாங்கி குறைகளை கேட்டறிவர். இதில், அனைத்து வகை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள், பணியின் போதும் அல்லது வேறு வகையிலும் ஏற்படும் குறைகளை தெரிவிக்கலாம். குறைகள் விதிமுறைக்குட்பட்டு தீர்வு காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி