இருவருக்கு பசுமை சாதனையாளர் விருது வழங்கல்

77பார்த்தது
இருவருக்கு பசுமை சாதனையாளர் விருது வழங்கல்
கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த இருவருக்கு 2023ம் ஆண்டிற்கான பசுமை சாதனையாளர் விருதினை கலெக்டர் வழங்கினார்.

தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளும் தனி நபர்கள், அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது மற்றும் ஒரு லட்சம் பணம் முடிப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக மரக்கன்றுகள் நடுதல், இயற்கை வளங்களை பாதுகாத்தல், பிளாஸ்டிக் பொருட்கள் பதிலாக மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொண்ட வகையில் பசுமை சாதனையாளர் விருதுக்கு 6 பேர் விண்ணப்பித்தனர்.

இதில் விண்ணப்பித்த நபர்களின் ஆவணங்கள் சரிபார்ப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் குறித்து மாவட்ட அளவிலான தேர்வு குழு மூலம் நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. அதில் கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் சாலை சேர்ந்த சாமிதுரை, நின்னையூர் சேர்ந்த அய்யனார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இருவருக்கும் 2023ம் ஆண்டிற்கான பசுமை சாதனையாளர் விருது மற்றும் தலா ஒரு லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் பிரசாந்த் வழங்கினார். நிகழ்ச்சியில், மாசு கட்டுபாட்டு வாரிய உதவி பொறியாளர் ராம்குமார், மாவட்ட சுற்றுச்சு சூழல் பொறியாளர் புருேஷாத்தமன் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி