கள்ளக்குறிச்சி தாலுகா, கூத்தக்குடி காலனி மெயின்ரோடு பகுதியில் 15 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு சில தினங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கூத்தக்குடி - வேப்பூர் சாலையில் நேற்று காலை 6: 15 மணியளவில் காலி குடங்களுடன், பழைய காலனியில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் இருந்து குடிநீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த வரஞ்சரம் போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில், 6: 50 மணியளவில் கலைந்து சென்றனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.