பெரியநாயகி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

58பார்த்தது
பெரியநாயகி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
சின்னசேலம் அடுத்த அம்சாகுளம் மாமரத்தாயி பெரியநாயகி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

கடந்த 3ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு விழா துவங்கியது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம், முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து காலை 7: 30 மணிக்கு கலசம் புறப்பாடாகி கோவிலின் நான்கு கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகமும், இரவு சுவாமி வீதியுலாவும் நடந்தது.

விழாவில், உதயசூரியன் எம். எல். ஏ. , விழுப்புரம் பருவதராஜகுல மீனவர் சமுதாய சங்க தலைவர் சாமிக்கண்ணு உட்ப திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி