கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில், விடுதியில் தங்கி பிளஸ் 2 பயின்ற மாணவி ஸ்ரீமதி, 2022 ஜூலை 13ம் தேதி மர்மமாக இறந்தார். ஜூலை 17ல் நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார், நான்கு பிரிவுகளில், 916 பேர் மீது வழக்கு பதிந்து, 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். பள்ளி முன் நடந்த கலவரத்தில் போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்த வழக்கு நேற்று கள்ளக்குறிச்சி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.வழக்கில் தொடர்புடைய 120 பேரில், இரு பெண்கள் உட்பட 107 பேர் ஆஜராகினர். அவர்களை விசாரித்த மாஜிஸ்திரேட் ரீனா, வழக்கு விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.