அரசு மருத்துவ கல்லுாரியில் கலெக்டர் திடீர் ஆய்வு

74பார்த்தது
அரசு மருத்துவ கல்லுாரியில் கலெக்டர் திடீர் ஆய்வு
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை பகுதியில் கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார். அப்போது, மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு வளாகத்தில் கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையம் மற்றும் கழிவுநீர் செல்லும் பாதையை பார்வையிட்டு, வடிகால் வசதியினை உரிய முறையாக ஏற்படுத்த வேண்டும். நாள்தோறும் குப்பைகளை அகற்றி சுகாதாரமான முறையில் பேணிபாதுகாக்க வேண்டும்' என, அறிவுறுத்தினார்.

தொடர்ந்து அவசர கவனிப்பு மற்றும் மீட்பு மையத்தில் (ஆதரவற்றோருக்கான மனநலப் பிரிவு) அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மீட்பு வழிமுறைகள், மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். பின், சிறுவங்கூரில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் ஆய்வு செய்தார். அதில் மருத்துவமனை பின்புறம் மழைநீர் தேங்கும் பகுதிகளை பார்வையிட்டு, மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால் வசதிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

மருத்துவமனை வளாகத்தில் பயன்பாடியின்றி இருக்கும் பழைய அரசு கல்லுாரி கட்டடத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு நோயாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டார்.

அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகங்களை தொடர்ந்து துாய்மையாக பராமரிக்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என, அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி