கள்ளக்குறிச்சியில் குரூப்-2 தேர்வு 13,601 பேர் எழுதுகின்றனர்

82பார்த்தது
கள்ளக்குறிச்சியில் குரூப்-2 தேர்வு 13,601 பேர் எழுதுகின்றனர்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை 14-ம் தேதி நடக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வினை 13,601 பேர் எழுதுகின்றனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப்-2 பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு நாளை 14ம் தேதி நடக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இத்தேர்வினை எழுத 13,601 பேர் விண்ணப்பித்துள்ளனர். கள்ளக்குறிச்சி வட்டத்தில் 38, திருக்கோவிலுார் வட்டத்தில் 8 என மொத்தம் 46 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு கண்காணிப்பு அலுவலர்கள், 4 பறக்கும் படைகள், 13 சுற்றுக் குழுக்கள், 46 முதன்மை கண்காணிப்பாளர்கள், 46 ஆய்வு அலுவலர்கள், 63 காவலர்கள், 48 ஒளிப்படப் பதிவாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்வுகள் முழுவதுமாக கண்காணிக்கப்படவுள்ளது. தேர்வுக்கூடத்திற்குள் மொபைல் மற்றும் மின்னணு சாதனங்களையும் கொண்டுவர அனுமதியில்லை. தேர்வு அனுமதிச் சீட்டினை தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி