ஜஸ்ட் பாஸ் - கேக் வெட்டி கொண்டாடிய ஊர் மக்கள்

67பார்த்தது
ஜஸ்ட் பாஸ் - கேக் வெட்டி கொண்டாடிய ஊர் மக்கள்
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று(மே 10) வெளியானது. இதில், முதல் இடம் பிடித்த மாணவர்களை மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் ஜஸ்ட் பாஸ் ஆன மாணவரை ஊர் மக்கள் ஒன்று கூடி பாராட்டிய சம்பவம் நடந்துள்ளது. மன்னார்குடி வடுவூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் பெற்ற ( 500க்கு 210 ) மாணவரை ஊர் மக்கள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி