ஜேபி நட்டா வருகை - பிடி கொடுக்காத பெரிய கட்சிகள்

79பார்த்தது
ஜேபி நட்டா வருகை - பிடி கொடுக்காத பெரிய கட்சிகள்
கூட்டணி குறித்து முக்கிய முடுவுகள் எடுக்க நாளை பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா தமிழ்நாடு வரவுள்ள நிலையில், சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட பெரிய கட்சிகளான பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் ஜே.பி.நட்டா சந்திப்பை புறக்கணித்து உள்ளனர். கடந்த முறை கூட்டணியில் உள்ள புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் சந்திப்பை புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எதிர்பார்த்த கட்சிகள் வராத நிலையில் ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், பாரிவேந்தர் ஆகியோர் மட்டுமே சந்திப்பில் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி