பத்திரிகையாளரும் நடிகருமான வேணுஜி காலமானார்

75பார்த்தது
பத்திரிகையாளரும் நடிகருமான வேணுஜி காலமானார்
கேரளாவில் பத்திரிகையாளர், திரைப்படம், சீரியல் மற்றும் நாடக நடிகரான வேணுஜி என்று அழைக்கப்படும் ஜி வேணுகோபால் காலமானார். அவருக்கு வயது 65. சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் கேரள பத்திரிக்கையின் முன்னாள் துணை ஆசிரியராக இருந்தவர். 1987ஆம் ஆண்டு ஹிந்தி திரைப்படமான அம்ஷினியில், சீமா பிஸ்வாஸ் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். மலையாளத்தில் கௌரிசங்கரம், மேகசந்தேசம், சைவர் திருமேனி, பிரசாரம், கிருஷ்ண கோபாலகிருஷ்ணா போன்ற படங்களிலும், ஓமனதிங்கள் புக்ஷி, டிடெக்டிவ் ஆனந்த், காயம்குளம் கொச்சுன்னி, தாமரகுழலி போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.