அதிமுக ஒன்றிணையாவிட்டால் வெற்றி பெற முடியாது

72பார்த்தது
அதிமுக ஒன்றிணையாவிட்டால் வெற்றி பெற முடியாது
அதிமுகவில் பிரிந்திருக்கும் சக்திகள் ஒன்றிணையவில்லை என்றால் எந்தக் காலத்திலும் வெற்றி வெற முடியாது என சென்னை விமான நிலையத்திற்கு வந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை சேர்ந்தவரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வியடைந்ததையடுத்து பலரும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என கோரிக்கை வரித்து வரும் நிலையில் ஓபிஎஸ் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு வாக்குகள் அதிகரித்தது, அண்ணாமலையின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி