இந்துக்கள் என்பதால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

85பார்த்தது
இந்துக்கள் என்பதால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
ஜம்மு காஸ்மீர் சிவகோண்டா கோயிலில் தரிசனம் செய்துவிட்டு ரியாசி பகுதியில் பயணிகளுடன் வந்துகொண்டிருந்த பேருந்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், "தீவிரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவர்கள் வைஷ்ணவ் தேவி கோயிலுக்கு தரிசன நிமித்தமாக பேருந்தில் சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் இந்து மக்கள் என்பதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். காயமடைந்தவர்கள் குணம் பெற வேண்டிக் கொள்கிறேன்” என நடிகையும் நாடாளுமன்ற எம்.பியுமான கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி