ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் நேற்று (ஜூன் 9) மாலை கோவிலுக்கு அந்த பக்தர்கள் பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்பு பேருந்தை ஜீப்பில் துரத்திச் செல்லும் காட்சிகள் சாலையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பஸ் பள்ளத்தாக்கில் விழுந்த பிறகும், பயங்கரவாதிகள் 20 நிமிடங்களுக்கு இடைவிடாமல் சுட்டதாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார். இதுவரை, 10 பேர் இறந்துள்ளனர் மற்றும் 33 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலர் குழந்தைகள்.