ஜே.என்.1 கொரோனா பாதிப்பு 511ஆக உயர்வு

569பார்த்தது
ஜே.என்.1 கொரோனா பாதிப்பு 511ஆக உயர்வு
கொரோனாவின் புதிய மாறுபாடான ஜே.என்.1 இந்தியாவில் அதிக அளவில் பரவிவருகிறது. இதுவரை நாடு முழுவதும் 511 பேர் ஜே.என்.1 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக கர்நாடகாவில் 199 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அடுத்த இடங்களில், கேரளா 148, கோவா 47, குஜராத் 36, மகாராஷ்டிரா 32, தமிழ்நாடு 26, டெல்லி 15, ராஜஸ்தான் 4, தெலங்கானா 2, ஒடிசா மற்றும் ஹரியானாவில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.