நகை கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை

80பார்த்தது
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பை கார்கர் பகுதியில் பிஎம் ஜூவல்லர்ஸ் என்ற நகை கடை இயங்கி வருகிறது. அந்த கடைக்குள் நேற்று (ஜூலை 28) இரவு சில கொள்ளையர்கள் முகமூடி அணிந்தவாறு நுழைந்தனர். தொடர்ந்து ஊழியர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டி, கடையில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அங்கிருந்த சிசிடிவி காட்சியை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி