கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு கொலை, கொள்ளைச் சம்பவம் நடந்தது. இதில், எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார்.