7 மாத குழந்தை உட்பட 5 பேர் உடல் கருகி பலி!

56பார்த்தது
உத்தரபிரதேசம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு மாத குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெஹ்தா ஹாஜிபூர் கிராமத்தில் உள்ள வீட்டில் நேற்று இரவு மின்கசிவு காரணமாக தீ மளமளவென பற்றி எரிந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த கோர விபத்தில் 7 மாத குழந்தை, 8 வயது குழந்தை, 2 பெண்கள் மற்றும் 35 வயதுடைய ஆண் உட்பட 5 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும், 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி: ANI

தொடர்புடைய செய்தி