சமீபத்தில் ஜான்வி கபூரின் வாசனை திரவிய விளம்பரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த விளம்பரத்தில் ஜான்வி குற்றவாளியாக நீதிமன்றத்தில் நுழைகிறார். அவர் தனது நறுமணத்தால் நீதிபதி உட்பட அனைவரையும் மயக்கும் வகையில் நடனமாடுகிறார். ஆனால் இந்த விளம்பரத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நீதித்துறையை அவமதிப்பது போல் உள்ளது என்று விமர்சித்து வருகின்றனர். இந்த விளம்பரத்தை உடனடியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதை நிறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.