"சமூக ஆர்வலர் மேதா பட்கர் சிறை தண்டனை"

65பார்த்தது
"சமூக ஆர்வலர் மேதா பட்கர் சிறை தண்டனை"
சமூக செயல்பாட்டாளர் தோழர். மேதா பட்கர் அவர்களை அவதூறு வழக்கில் 5 மாத சிறை தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கின்றது என திருவள்ளூர் எம்.பி., சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், மனித உரிமைக்கான, ஜனநாயகத்திற்கான, இயற்கை வள பாதுகாப்பிற்கான தனது போராட்டத்தை சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கும், முதலாளித்துவ சக்திகளுக்கும் எதிராக தொடர்ந்து களமாடி வரும் போராளிகளை திட்டமிட்டு கைது செய்வது, அதன் மூலம் அவர்களின் எண்ணங்களையும், சிந்தனைகளையும், செயல்பாடுகளையும் முடக்கப்பட்டு வருவதை மக்கள் கவனித்து வருகின்றனர்.

மக்களுக்கு ஆதரவாக செயல்பட முடியாத மோடி அரசு மக்கள் செல்வாக்கு பெற்றவர்களை தனது அதிகாரங்களை பயன்படுத்தி ஒடுக்கி வருகின்றது. இத்தகைய நெருக்கடியான சூழலில் தோழர். மேதா பட்கர் அவர்களுடனும், அவரோடு தொடர்ந்து களமாடும் ஜனநாயக முற்போக்கு சக்திகளுடனும் நீதி கிடைக்கும் வரை துணை நின்று போராடுவோம் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி