தோனியின் சாதனையை சமன் செய்த ஜடேஜா

69பார்த்தது
தோனியின் சாதனையை சமன் செய்த ஜடேஜா
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணி அபார வெற்றிப் பெற்றது. இதில், ஜடேஜா நான்கு ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் ஜடேஜா ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். சென்னை அணிக்காக அதிக ஆட்டநாயகன் விருதைப் பெற்ற தோனியை தற்போது ஜடேஜா சமன் செய்துள்ளார். இதுவரை இருவரும் 15 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி