சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் அவசர தரையிறக்கம்

55பார்த்தது
சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் அவசர தரையிறக்கம்
சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் புறப்படும் போது இன்ஜின் கவர் கழன்று விழுந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. டெக்சாஸ் மாநிலம் ஹூஸ்டன் நகருக்குச் செல்லவிருந்த சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸின் போயிங் 737-800 ரக விமானத்தின் இன்ஜின் கவர் கழன்று விழுந்தது. இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதையடுத்து, விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் டென்வர் சர்வதேச விமான நிலையத்திற்கு பாதுகாப்பாக திரும்பியது. தொடர்ந்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி