திமுக கூட்டணிக்குள் இருந்துக்கொண்டு மது ஒழிப்பு என்பது சாத்தியமில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், 'விசிகவின் மது ஒழிப்பு மாநாடு வரவேற்கத்தக்கது. அதிமுக விரும்பும் மெகா கூட்டணிக்கு இது ஒரு தொடக்கப்புள்ளி. எதார்த்தத்தை திமுக கூட்டணிக் கட்சிகள் புரிந்துகொண்டுள்ளன. மது ஒழிப்பு, நீட் விலக்கு என அடுத்தடுத்த பிரச்சனைகள் எழும்' என்றார்.