ரத்த தானம் வழங்க முக்கிய காரணம் இவர் தான்.! எப்படி தெரியுமா?

56பார்த்தது
ரத்த தானம் வழங்க முக்கிய காரணம் இவர் தான்.! எப்படி தெரியுமா?
நவீன ரத்த மாற்று நடைமுறைகளின் தந்தை என்று அழைக்கப்படும் கார்ல் லேன்ட்ஸ்டெய்னரின் பிறந்த தினம் ஜூன் 14 ஆகும். இவர் 1900ம் ஆண்டு தனது ஆராய்ச்சிகளின் மூலம் ரத்த வகைகளை ஏ, பி, ஏபி, ஓ என வகைப்படுத்தினார். இந்த ஆராய்ச்சிகள் இரத்த மாற்று சிகிச்சை முறைக்கு வழி வகுத்தது. இன்று பல உயிர்கள் காப்பாற்றப்படுவதற்கு காரணமும் இவரே. இதற்காக 1930ல் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. எனவே இவரது பிறந்த தினத்தையே ரத்ததான தினமாக உலக சுகாதார நிறுவனம் 2004ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி முதல் கொண்டாடி வருகிறது.

தொடர்புடைய செய்தி