ஒரு நாளைக்கு அதிகமாக காபி, டீ குடிக்கும் போது உடலில் நீர்ச்சத்து வறண்டுபோகும். அதிக அளவில் காபி, டீ குடிப்பவர்களுக்கு இரும்புச்சத்துக் குறைபாடு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதோடு செரிமானம் தொடர்பான தொந்தரவுகளும் வரலாம். காபியோ, டீயோ, ஒருநாளைக்கு ஒன்று முதல் இரண்டு கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம். ஒரு கப் என்பது 100 முதல் 150 மில்லி வரை இருக்கலாம். அப்படி அளந்து குடிப்பதே சிறந்தது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.