அஜித் படம் வெளியாவதில் சிக்கல்?

68பார்த்தது
அஜித் படம் வெளியாவதில் சிக்கல்?
ரீ-ரிலீஸ் கலாச்சாரத்தை ரசிகர்கள் பெரிதும் விரும்புகின்றனர் என்பதற்கு சான்றாக இருக்கிறது சமீபத்திய ரீ-ரிலீஸ் படங்களின் வசூல். 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி மீண்டும் திரையரங்குகளில் ரீரிலீஸ் செய்யப்பட்ட நடிகர் விஜய்யின் கில்லி படம் சில நாட்களிலேயே ரூ. 12 கோடி வசூலைக் கடந்திருக்கிறது. இந்நிலையில், நடிகர் அஜித்தின் பிறந்தநாளான மே 1 அன்று அவர் நடித்த மங்காத்தா படம் ரீரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மங்காத்தா படத்தின் தயாரிப்பாளரான தயாநிதி அழகிரி மூலையில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்று தற்போது மருத்துவமனையில் உள்ளதால் இந்த கொண்டாட்டம் தேவையா என்ன கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி