விசிக-வில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா அளித்த பேட்டியில், "25 சதவீத வாக்கு மட்டுமே வைத்துள்ள ஒரு கட்சி தனிப்பெரும் கட்சியாக தன்னை நினைத்து அதிகாரப் பரவலைத் தடுக்கிறது. இதைத்தான் மன்னராட்சி என குறிப்பிடேன். தவெக-வில் இணைவது பற்றி எதிர்காலம் முடிவு செய்யும். ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு பெறுவதற்கான பிரச்சாரத்திற்கான முயற்சிகளை எடுக்குமாறு திருமாவளவன் கூறினால் விசிக-விலேயே இருப்பேன்" என்றார்.