முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறாரா சித்தராமையா..?

65பார்த்தது
முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறாரா சித்தராமையா..?
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு பதவியை ராஜினாமா செய்வார் என்ற யூகங்கள் எழுந்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள அவர், “நான் முதல்வராக தொடர வேண்டும் என்று கட்சித் தலைமை முடிவு செய்தால், நீடிப்பேன். இதனை காங்கிரஸ் தேசிய தலைமை முடிவு செய்யும்.
4 ஆண்டுகளுக்குப் பிறகு தனிப்பட்ட அரசியலில் ஈடுபடப் போவதில்லை. வரும் மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆட்சி அமைக்க போதிய இடங்கள் கிடைக்காது என்றார்.

தற்போது கர்நாடக துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் உள்ள நிலையில், சில ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி