செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக தொடர்கிறாரா என உச்ச நீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது. பண மோசடி வழக்கில் சிறை சென்ற செந்தில் பாலாஜி, 15 மாதங்களுக்கு பிறகு ஜாமினில் வந்து மீண்டும் அமைச்சரானார். இதனை எதிர்த்து வித்யா குமார் தொடர்ந்த மனுவை விசாரித்த கோர்ட், வரும் 18ம் தேதிக்குள் செந்தில்பாலாஜி எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. ஜாமின் கிடைத்த மறுநாளே ஏன் அமைச்சரானார் என கடந்த 2ஆம் தேதியும் உச்ச நீதிமன்றம் கேட்டிருந்தது.